பாஜக வெற்றியும் பங்குச்சந்தை எழுச்சியும்..!
குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிப்பெற்று, தன்னிச்சையாக ஆட்சி அமைக்கப்போகிறது
பிஜேபி கட்சி. இந்நிலையில் கடந்த 5 வருடத்தில் பிஜேபி ஆட்சியில் குஜராத்தில் இருக்கும் நிறுவனங்கள் தடாலடியாக பங்குச்சந்தையில் உயர்வை சந்தித்துள்ளது.
5 வருட பிஜேபி ஆட்சியில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள குஜராத் மாநில நிறுவனங்கள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது. இன்றைய வர்த்தகத்திற்கும், இனி வரும் நாட்களுக்கும் இந்த தகவல்கள் முதலீட்டாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
டிசம்பர் 14, 2012 முதல் டிசம்பர் 15, 2017 வரையிலான 5 வருட காலக்கட்டத்தில், குஜராத் போரோசில் நிறுவனம் அதிகபடியாக 2,474 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் இந்நிறுவன பங்குகள் 5.18 ரூபாயில் இருந்து 133.35 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.
அதேபோல் சிம்போனி நிறுவனம் 900 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 5 வருடத்தில் 163.15 ரூபாயில் இருந்து 1,652.50 ரூபாய் வரையில் உயர்ந்து அசத்தியுள்ளது.
2012-2017 வருடத்தின் இடைப்பட்ட காலத்தில் குஜராத் அம்புஜா எக்ஸ்போர்ட் 620 சதவீதமும், GNFC நிறுவனம் 467 சதவீதம், குஜராத் கிராப்ட் இண்டஸ்ட்ரீஸ் 408 சதவீதமும், குஜராத் ஆல்கலீஸ் 403 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.குஜராத் தெமிஸ் பயோசின் 393 சதவீதமும், குஜராத் ஸ்டேட் பெட்ரோ 176 சதவீதமும், குஜராத் பிப்பாவ் 175 சதவீதமும், குஜராத் ப்ளூரோகெமிகெல்ஸ் 166 சதவீதமும், குஜார்த் சித்தி சிமெண்ட் 134 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.