ஓய்வு பெறும் வயதில் வீடு:கவனத்தில் கொள்ள வேண்டியவை..!
வேலை நிமித்தமாக பிள்ளைகள் ஊர் ஊராக சுற்ற, அவர்களின் வாழ்க்கை ஒட்டத்திற்கு ஈடு கொடுக்கப் பிடிக்காமகலும் பல்வேறு பிற காரணங்களுக்காவும் பல முதியவர்கள் தனியாக வாழவே விரும்புகின்றனர். இதற்கேற்றார் போல் கடந்த சில வருடங்களாகவே ஒய்வுக்கு பிறகான வீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன.
ஒய்வு பெற்றவர்கள் வீடு வாங்கும் முன் அவசியம் கவனத்தில் கொள்ளவேண்டியதை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.
வீட்டுக் கடன்?
வீட்டுக் கடன் ஒப்புதல் வழங்க வங்கிகள் முக்கியமாக கருத்தில் கொள்வது வயது. ஆகவே வங்கிக் கடன் என்பது சவால் மிகுந்ததே. ஒய்வுக்கான தொகை முழுவதையும் வீடு வாங்குவதில் முதலீடு செய்யாமல், ஒரு பகுதியை தேவைகளுக்காக ஒதுக்கி வைத்தல் நல்லது. ஆகவே அதற்கேற்றார் போல் இரண்டு பேர் போதிய வசதியுடன் இருக்குமளவுக்கு சிறிய வீடாகவோ அல்லது அனைத்து வசதிகளும் இருக்கும் படியான ஒய்வானவர்களுக்கென்று பிரேத்யகமான வீட்டையோ வாங்கலாம். எதுவானலும், முதலீட்டு தொகையை கவனத்தில் கொள்வது அவசியம்
தலைப்பு ஆவணம்
தலைப்பு ஆவணத்தை கவனமாக சரி பார்க்க வேண்டும், முக்கியமாக ஒய்வு வீட்டில் முதலீடு செய்கையில் பல ஆப்ஷன்ஸ் உண்டு. அதற்கேற்ப ஆவணங்களை சரி பார்த்துக் கொள்வது அவசியம். தனக்குப் பிறகு சொத்து எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக வரையுறுத்தி அமைப்பது பிந்நாளில் பல சிக்கல்களை தவிர்ப்பதற்கு உதவும்.
எதிர்பாராத தருணங்கள்
தற்போதுள்ள வாழ்க்கை முறை சிறியவர் முதியவர் என்ற பாகுபாடின்றி அனைத்து வகையான புதுப்புது நோய்களை நமக்கு அளித்துள்ளது. அதிகரித்து வரும் மருத்துவ கட்டணங்களை கருத்தில் கொண்டு வயது முதிர்ந்தவர்கள் தங்களது மருத்துவ தேவைக்கென அல்லது எதிர்பாராத சூழல்களை எதிர்கொள்ள சேமிப்பு வைத்துக் கொள்வது அவசியம். இதை திட்டமிட்டு, அதற்கேட்ற்றார் போல் முதலீடு தொகையை தீர்மனிப்பது சிக்கல்காளை தவிர்க்க உதவும். இது மட்டுமின்றி யாத்திரைகள் அல்லது ஊர் சுற்றிப் பார்க்க என திட்டமிட்டுக் கொள்ளவதும் வாழ்கைகை ஒய்வு காலத்தில் சுவாரஸ்யமாக்க உதவும்.
காப்பீடு
வேலையின் பொழுது அலுவலங்களில் நமக்கு அளிக்கப்பட்ட மருத்துவ காப்பீடு அல்லது மருந்துக்கான செலவுகள் என பல சலுகைகள் ஒய்விற்கு பிறகு இல்லாமல் போக வாய்ப்புண்டு. இதனை கருத்தில் கொண்டு காப்பீடுகளை நடு வயதிலயே திட்டமிடல் நன்மை பயக்கும், இது மட்டுமின்றி வீட்டிற்கான காப்ப்பீடு போன்றவையும் எதிர்பாராத இயற்கை பாதகங்களிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் உதவும். ஆகவே வயது மற்றும் சூழலுக்கு ஏற்றவாறு காப்பீட்டை திட்டமிடல் வேண்டும்,
வரி சலுகைகள்
ஓய்வு பெற்றவர்களுக்கு முதலீட்டில் பல வரி சலுகைகளையும் அரசாங்கம் அளிக்கின்றது. இவற்றை அறிந்து கொண்டு அல்லது தேர்ந்த நிபுணர்களின் உதவியோடு திட்டமிடல் சேமிப்பை உயர்த்தும். ஒய்வூதியம் இல்லாத மூத்த குடிமக்களுக்கு, சொந்த வீடிருப்பின் வங்கியில் ‘ரிவர்ஸ் மார்ட்கேஜ் கடன்’ வழங்கப்படுகிறது. இதன் மூலம் வீட்டின் மதிப்பிற்கேற்ப மாதா மாதம் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும். இத்தகைய மாதத் தொகைக்கு வருமான வரி விலக்கும் உள்ளது.
தேவைகளை அலசி ஆராய்ந்து அதற்கேற்றர் போல் முடிவெடுத்தல் ஒய்வுக்கு பிறகான வாழ்க்கையை வளமாக்கும். பல ஆண்டுகளாக உழைத்து அதன் பிறகான வழ்க்கையை நிமம்தியாக எடுத்துச் செல்வது உத்வேகமளிப்பதாகவே அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.